சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியோடு, இணைக்கப்பட்ட, NGO-காலனி, போக்குவரத்து நகர் 6-வது மெயின் வீதி மற்றும் ஆதம்ஸ் கார்டன் முதல் காளையப்பா நகர் மெயின் ரோடு வரை புதிதாக அமைக்கப்பட உள்ள தார்ச்சாலைக்கான பூமி பூஜை நிகழ்வினை, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்களும், மாநகராட்சி (பொ) மேயர் நா.குணசேகரன் அவர்களும் தொடங்கி வைத்தார்கள். நிகழ்வில் மாவட்ட அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், சாக்கோட்டை EX.ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் மாமன்ற உறுப்பினர்கள் துரை நாகராஜன், கார்த்திகேயன், கணபதி, கணேசன், சுப்பையா, ரவி மற்றும் போக்குவரத்து நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், காளையப்பா நகர் பொதுமக்கள் மற்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



