இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆணைப்படியும், இளைஞர் தலைவர் இளைய வேந்தர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) வெற்றி வேட்பாளர் கஜா என்கிற கஜேந்திரன் அவர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. பொத்தேரியில் அமைந்துள்ள இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஐஜேகே செங்கல்பட்டு மாவட்ட தலைவர் கோ. தனசேகரன், நகர தலைவர் சி.கே. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, வேட்பாளர் கஜேந்திரனை மாலை அணிவித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அதிமுக காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் சம்பத்குமார், மறைமலைநகர் முன்னாள் சேர்மன் கோபிகண்ணன், கூடுவாஞ்சேரி முன்னாள் சேர்மன் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். இதில் ஐஜேகே சார்பில் ஒன்றிய கவுன்சிலர் சுஜாதா பெருமாள், மகளிர் அணி நிர்வாகிகள் கலா, இந்திரா உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





