திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்று திறனாளி வாக்காளர்கள் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
7 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டிலிருந்த படியே வாக்களிப்பதற்கு ஏதுவாக, படிவம் 12-D (Form 12-D)-ஐ வழங்கி வாக்காளர்களின் சம்மதம் பெற 23-ம் தேதி (திங்கள்) முதல் மேற்கண்ட வாக்காளர்களின் இல்லம் தேடிச் சென்று படிவங்கள் வழங்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே இவ்வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா





