மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்ஜினியர் மாணிக்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் நாச்சிகுளம் கரட்டுப்பட்டி நாச்சிகுளம் பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வாக்குறுதிகளை பொதுமக்களிடம் விளக்கி பேசினார் தொடர்ந்து தான் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்தபோது செய்த நலத்திட்டங்களையும் தற்போது வெற்றி பெற்று செய்ய இருக்கும் திட்டங்களையும் விளக்கி கூறினார். வேட்பாளர் மாணிக்கத்தை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, ஒன்றிய கவுன்சிலர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் மேல் நாச்சி குளத்தில் கிளைச் செயலாளர் கார்த்திக் தலைமையில் நிர்வாகிகள் வேட்பாளர் மாணிக்கத்திற்கு வரவேற்பு அளித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





