சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள குன்றக்குடியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ் மாமுனிவர் என்று போற்றப்படும் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 102-வது பிறந்தநாள் அரசு விழா நடைபெற்றது. இதையொட்டி, குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி அடிகளாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். குன்றக்குடி அடிகளாரின் தமிழ் மொழி, ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூரும் வகையில் அரசு விழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




