சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாராளுமன்ற அலுவலகத்தில் வருண் ஐபிஎஸ், சீமான் வார்த்தைகளால் மோதல் விவகாரத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் மற்றும் படைத்தலைவர் உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகங்கை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேட்டுக்கொண்டார். ஆங்கில புத்தாண்டு நாளில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி. ப.சிதம்பரம். அவர்கள் காரைக்குடியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் இவ்வாறு கூறினார். அப்போது எஸ் மாங்குடி எம்எல்ஏ, சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நகர தலைவர் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ சுப்பிராம், கே.டி.குமரேசன், நடிகர், சிதம்பரம் செட்டியார், ரயில்வே தட்சிணாமூர்த்தி, அப்பாவு ராமசாமி, மனச்சை கருப்பையா, கோவிலூர் அழகப்பன், ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





