சோழவந்தான் தனி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பாலமேடு பேரூர் செயலாளர் வி.கே.குமார், ஆகியோர் முன்னிலையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், இலவச மடிக்கணினி, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக் கூறி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் செலுத்தப்படும். வீட்டிற்கு ஒரு இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வாக்கு சேகரிக்க வருகை தந்த அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு அப்பகுதியில் குடியிருந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை ராஜேஷ் கண்ணா, பேரூர் செயலாளர்கள் அழகுராஜ், வாடிப்பட்டி டாக்டர் அசோக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் ராமராஜ், மற்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி பாட்டாளி மக்கள் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





