மதுரை : மதுரை தெப்பக்குளம் சிமெண்ட் சாலையில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்ட சமுதாயக் கூடத்தை, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு. பூமிநாதன் திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் மணி மாறன், உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவிப் பொறியாளர் ஆரோக்கிய சூசை, கவுன்சிலர் தமிழ் செல்வி, ஒப்பந்ததாரர் பவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





