சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டாக்டர் டி.கே. பிரபு முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட துணைச் செயலாளர் மருங்கிபட்டி ரமேஷ், தலைமையில் 3000 க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் உஞ்சனை ராமசாமி அம்பலம், கிட்&கிம் கல்லூரி சேர்மன் ஐயப்பன், வேட்பாளர் பிரபுவின் தந்தை இந்திய சுதந்திர போராட்டத்தின் தியாகிகளின் வர்க்கம் துரை.கருணாநிதி, மற்றும் காளிமுத்து துணை ஆட்சியர் (ஓய்வு) நகரச் செயலாளர் சொக்கு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வந்தவர்களில் சரிபாதி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





