சிவகங்கை: காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2026-27 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு வருகிற (06.06.2026)(சனிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் தேவையான அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை கல்லூரி நிர்வாகத்திடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




