செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த அஜித் குமார் சர்வதேச அளவில் நடைபெற்ற முதல் சர்வதேச பூப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு தங்க பதக்கத்தை பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் அவர் சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டிற்குவந்து சேர்ந்த அவருக்கு இரயில் நிலையத்தில் இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பயிற்சியாளரும், செங்கல்பட்டு மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் தலைவரும் ஆகிய சந்திரசேகர், ஆலோசகர் போலீஸ் பாலு, ரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி திலக், திரளான பூப்பந்து விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த மாணவனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் .எஸ். மாலதி ஹெலன் அவர்கள் நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவனை சால்வை அணிந்து வாழ்த்து தெரிவித்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்





