மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் எம்.வி. கருப்பையா, திமுக வேட்பாளர் வெங்கடேசன் அவர்களை 2,678 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
கருப்பையா 63,907 வாக்குகள் பெற்ற நிலையில், வெங்கடேசன் 61,229 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 49,494 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலட்சுமி 10,430 வாக்குகளும், மற்றொரு வேட்பாளர் டாக்டர் பாலமுருகன் 2,091 வாக்குகளும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற எம்.வி. கருப்பையா அவர்கள் தேர்தல் அதிகாரியிடமிருந்து வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து வாழ்த்தி, ஊர்வலமாக அழைத்து சென்றனர். குறிப்பிடத்தக்க வகையில், 2011–2016 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





