மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் வெற்றி பெற வேண்டி வெல்லும் வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டிக்கு *தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 15 kg கேக் ஏற்பாடு செய்யப்பட்டது. தேர்தல் நடைபெறும் முன்னே வெற்றி விழாவுக்காக கேக் வழங்கிய மனிதநேய மக்கள் கட்சியினருக்கு நன்றி கூறிய திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப் பாண்டி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிருத்திகா தங்கபாண்டியன் வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.
அப்பொழுது, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் வெற்றி பெற வாழ்த்துக்கள் சுமார் 15 கிலோ அளவில் கேக் தயார் செய்யப்பட்டு வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் கேக் வெட்டி இஸ்லாமிய சகோதரிகளுக்கு வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்.
நிகழ்ச்சியின் வரவேற்க குதிரையில் திமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கொடிகள் பறக்க விடப்பட்டு 400க்கும் மேற்பட்ட பெண்கள் வரவேற்பளித்தனர். முதல்வர் ஸ்டாலினின் சிறுபான்மை மக்களுக்கு கடந்த ஆட்சி காலத்தில்வழங்கிய சலுகைகளுக்கும் நன்றி தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திமுக திற்கு ஆதரவை அளித்ததனர்.
இதில், 400-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் வேட்பாளர் கிருத்திகாதங்க பாண்டியனுக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வரவேற்பளித்தனர். தேர்தல் முடிவுக்கு முன்னே திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் வெல்லும் வேட்பாளர் என, மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் கேக் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




