மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா எம்எல்ஏ தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டு தீர்வு காணும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன் தினம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சிவராமன் திடீரென தற்கொலை செய்து கொண்டார் .
இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனைக்கு வருகை தந்த எம்.வி .கருப்பையா எம்.எல்.ஏ போக்குவரத்து பனிமனையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ,ஓட்டுநர் சிவராமனின் திடீர் தற்கொலைக்கு காரணம் என்னவென்று அதிகாரிகளிடம் விவரங்கள் கேட்டறிந்தார். தொடர்ந்து, போக்குவரத்து பணிமனையில் செய்யப்பட வேண்டிய மறு கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவரங்கள் கேட்டிருந்தார் .
இது குறித்து ,விரைவில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்துச் சென்றார் .சட்டமன்ற உறுப்பினருடன் நிர்வாகிகள் வழக்கறிஞர் தியாகராஜன் , தாமு மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





